Main Menu

பாடசாலைகளில் மத அடையாளங்கள் வேண்டாம் – பிரான்ஸ் மக்கள்

மதச்சார்பின்மையை (laïcité) 100% பாடசாலைகளில் நிறைவேற்ற வேண்டும். 0 சதவீதம் கூட விட்டுக்கொடுப்பு  (tolérance zéro) இருக்கக் கூடாது என பெரும்பான்மையான மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரபல புள்ளிவிபர நிறுவனம் செய்த கருத்துக் கணிப்பில் பாடசாலைகளில் மதச்சார்பின்மை மிகக் கடுமையாக கடைப்பிடிக்கப்படல் வேண்டும் எனவும், மத ஆடைகள் தடை செய்யப்படல் வேண்டும் எனவும், 76 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் 65 சதவீதமானவர்கள் மதச்சார்பின்மையை மீறுபவர்களிற்கு,  முதல் தடவையே தண்டனை வழங்க வேண்டும் என்றும், எந்தவிதமான விட்டுக்கொடுப்பகளும் இருக்கக் கூடாது என்றும்,கருத்துத் தெரிவித்துள்ளனர்.

24 சதவீதமானவர்கள் இந்த மதச்சார்பின்மைக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தும் உள்ளனர்.

பகிரவும்...