17 கைதிகள் தப்பியோட்டம்; தமிழக முதல்வர் விஜய் அதிரடி நடவடிக்கை
தேனி மாவட்டச் சிறையில் 17 கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்ற சம்பவத்தின், சில நாட்களுக்குப் பிறகு, குறித்த சிறையின் துணை கண்காணிப்பாளரைத் தமிழக முதல்வர் விஜய் இன்று (31) பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
மேலும் சிறை ஊழியர்கள் பலரை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேனியில் 2024 ஆகஸ்ட் முதல் பணியாற்றி வந்த சிறைத்துறை துணை கண்காணிப்பாளர் என். ராமலிங்கம், சிறை நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பில் தவறிழைத்ததற்காக பணியிலிருந்து நீக்கப்பட்டதாக ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 17 பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் மீது துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திச் சேவை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் சிறைகளிலும் மிக உறுதியான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் உறுதி செய்யுமாறு விஜய் உத்தரவிட்டார்.
சிறையிலிருந்து தப்பிச் சென்ற 17 கைதிகளும் மீண்டும் பிடிபட்டனர்.
அவர்களை மாநிலம் முழுவதும் உள்ள கூடுதல் பாதுகாப்பு கொண்ட சிறைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்று பிடிஐ (PTI) செய்தி நிறுவனம் காவல்துறையை மேற்கோள் காட்டி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சென்னைக்கு அருகிலுள்ள புழல் பகுதியில் அமைந்துள்ள, பலத்த பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் ஒக்டோபர் 20 அன்று தப்பிச் சென்றனர்.
ஏழு காவல் குழுக்கள் இரண்டு நாட்கள் தேடிய பிறகு, அவர்கள் பிடிபட்டனர்.
இருப்பினும், ஒரு வார இடைவெளிக்குள் நடந்த இந்த இரண்டு சிறை உடைப்புச் சம்பவங்களும் தமிழ்நாடு அரசை நடவடிக்கை எடுக்கத் தூண்டியமையும் குறிப்பிடத்தக்கது.
