முதலாவது ஆண்டு நினைவஞ்சலி – அமரர். ஜெயக்குமார் உருத்திரமூர்த்தி குருக்கள் (30/10/2026)
தாயகத்தில் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், பிரான்சில் நாற்பது ஆண்டுகளாக வாழ்ந்து, தம் அன்பாலும் பண்பாலும் பலரது இதயங்களில் இடம் பிடித்தவருமான அமரர் ஜெயக்குமார் உருத்திரமூர்த்தி குருக்கள் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலி இன்று உணர்வுபூர்வமாக நினைவு கூரப்படுகின்றது.
அறிந்தவர்கள், அறியாதவர்கள் எனப் பாகுபாடின்றி அனைவரையும் அன்போடும் பண்போடும் அரவணைத்து, மனமுவந்து ஆதரித்து, பசித்தோருக்கு உணவளித்து, பிறர் துயர் துடைப்பதையே தம் வாழ்வின் உயரிய பணியாகக் கொண்டவரும், கலைக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்து, சென்ற இடமெல்லாம் தம் கலைத் திறமையாலும் நற்பண்புகளாலும் தனித்துவமான தடம் பதித்த
நீங்கள் ஒரு சிறந்த கலைஞர் மட்டுமல்ல; நல்ல மனிதராகவும், அன்பான கணவராகவும், பாசமிகு தந்தையாகவும் எங்களை அன்போடு அரவணைத்துப் பாதுகாத்தவராவீர்கள்.
உடலால் எங்களை விட்டுப் பிரிந்து ஓராண்டு கடந்து விட்டது. ஆனால், உங்கள் நினைவுகள் மட்டும் எங்களை விட்டு ஒருபோதும் பிரியவில்லை. எங்கள் இல்லத்திலும், இதயங்களிலும், உறவுகளின் நினைவுகளிலும் உங்கள் அன்பும் பண்பும் என்றும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
காலன் உங்களை எங்களிடமிருந்து பிரித்துச் சென்றாலும், உங்கள் அன்பையும் அரவணைப்பையும் நினைவுகளையும் எங்களிடமிருந்து பிரிக்க முடியாது. எங்கள் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் உங்கள் நினைவுகளோடு பயணிக்கின்றோம்.
நீங்கள் எம்மைவிட்டுப் பிரிந்தாலும், எங்கள் இதயங்களிலிருந்து ஒருபோதும் மறையமாட்டீர்கள். நீங்கள் விட்டுச் சென்ற அன்பின் அடையாளங்களும், கலைக்காக ஆற்றிய பணிகளும், மனிதநேயத்தின் வழியில் பதித்த தடங்களும் என்றும் அழியாதவை. உங்கள் பிரிவின் வலியை நெஞ்சில் சுமந்தவாறு, நீங்கள் எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றோம்.
இன்று அமரர் ஜெயக்குமார் உருத்திரமூர்த்தி குருக்கள் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு நாளை அனுஷ்டிக்கும் அன்பு மனைவி சித்திரலேகா, பாசமிகு பிள்ளைகள் தனுஜா, சித்திரகுமார், சகோதரர்கள், சகோதரிகள், மச்சான்மார், மச்சாள்மார், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் உங்கள் நினைவுகளை நெஞ்சில் சுமந்து கண்ணீருடன் நினைவுகூருகின்றார்கள்.
அமரர் ஜெயக்குமார் உருத்திரமூர்த்தி குருக்கள் அவர்கள், TRT தமிழ் ஒலி குடும்பத்தோடும் நெருங்கிய தொடர்புகொண்டு, தம் பங்களிப்பை வழங்கியவர். அவரது முதலாவது ஆண்டு நினைவு நாளில், TRT தமிழ் ஒலி குடும்பமும் அவரை நினைவுகூர்ந்து நெஞ்சார்ந்த அஞ்சலி செலுத்துகின்றது.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்புப் பிள்ளைகள் தனுஜா, சித்திரகுமார்.
அவர்களுக்கு எமது நன்றி!

