பேருந்து – லொரி நேருக்கு நேர் மோதி விபத்து; 05 பேர் காயம்
அஹங்கம, கதோலுவ (Katholuwa) சந்திக்கு அருகில் இன்று (26) காலை பேருந்து ஒன்றும் டிப்பர் லொரி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
காலி பகுதியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற பேருந்து, எதிர்த் திசையில் வந்த டிப்பர் லொரியுடன் மோதியதில் இந்த விபத்து இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்களின் உதவியுடன் அம்பியூலன்ஸ்கள் மூலம் காலி தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தினால் காலி – மாத்தறை பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
