Main Menu

அநுராதபுரத்தில் பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; 10 வயது சிறுமி பலி

அநுராதபுரம், துருவில வீதியில் அநுராதபுரம் நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் 10 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தஹய்யாகம சுற்றுவட்ட வீதியில் இருந்து 55 வீடுகள் பகுதியை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (SLTB) பேருந்து ஒன்று, அதே திசையில் முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் நேற்று (24) இரவு இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பாகப் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.