Main Menu

துடிக்கும் இருதயத்தைக் காப்பதற்கு உடனடி நடவடிக்கை அவசியம் – இன்று உலக இருதய தினம்

உலகெங்கிலும் இருதய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாரடைப்பைத் தடுத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் செப்டம்பர் 29ஆம் திகதி உலக இருதய தினம் அனுசரிக்கப்படுகின்றது.

உலக இருதயக் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் இந்த நாள், உலகளவில் அதிக அளவிலான உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருக்கும் இருதய நோய்கள் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தடுக்கக்கூடிய உயிரிழப்புகளைக் குறைப்பதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான உலக இருதய தினத்தின் கருப்பொருள் “Don’t Miss a Beat” என்பதாகும்.

இருதய நோய்களின் ஆரம்பகால அறிகுறிகளைத் துல்லியமாக அடையாளம் கண்டு, உடனடியாக மருத்துவ ஆலோசனைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை இந்த ஆண்டின் கருப்பொருள் வலியுறுத்துகிறது.