Main Menu

தென் ஆபிரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 17 பேர் உயிரிழப்பு

தென்னாபிரிக்காவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் உள்ள கிராமப்புற நகரமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 15 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அருகருகே அமைந்துள்ள இரு வீடுகளில் இருந்தவர்கள் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய காவல்துறை ஊடகப் பேச்சாளர் அத்லெண்டா மேத்தே (Athlenda Mathe) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

தென்னாபிரிக்காவில் அண்மைக்காலமாக இத்தகைய குழு மோதல்களும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்ற பின்னணியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.