பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்னிடம் கேள்வி கேட்பதா? பாகிஸ்தான் செய்தியாளரின் கேள்விக்கு ஜெய்சங்கரின் ஆவேச பதில்
ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி சர்ச்சைக்குள்ளானது.
பாகிஸ்தானில் இடம்பெறும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவளிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் அங்குள்ள சீக்கியத் தலைவர்கள் இலக்கு வைக்கப்படுவது தொடர்பாக அந்த செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
இதன்போது, “உங்கள் அரசு எப்போது பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்தும்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஒரு நாடு என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறதா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த கருத்துப் பரிமாற்றம் தொடர்பான காணொளி மற்றும் தகவல்கள் தற்போது சமூக ஊடகங்களின் பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
