Day: September 26, 2026
ஞானசாரவுக்கு பொதுமன்னிப்பு கோரி கையெழுத்து சேகரிப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, மீண்டும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கக் கோரி, 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் விசேட பிரசாரம் இன்று (26) மிஹிந்தலை புனித பூமியில் தொடங்கியது. மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதிமேலும் படிக்க...
நேபாள பேரழிவு: 56 யுக்ரைன் ஆன்மிக பயணிகளின் நிலை மர்மம் – மீட்க முடியாமல் திணறும் மீட்புக்குழு

நேபாளம் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு பேரழிவைத் தொடர்ந்து, கைலாஷ் யாத்திரை மேற்கொண்ட 56 யுக்ரைன் ஆன்மீகப் பயணிகளின் நிலை என்னவென்று தெரியாமல் தொடர்ந்து மர்மமாகவே நீடித்து வருகிறது. கைலாஷ் யாத்திரையை முடித்துவிட்டு திரும்பிய யுக்ரைன்மேலும் படிக்க...
22 வது திருத்தம் – நாட்டின் மக்களின் தோல்வி – சஜித்

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் நாட்டின் 220 இலட்சம் மக்களின் ஜனநாயக உரிமை இழக்கப்பட்டு, அவர்கள் தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (25) இடம்பெற்றமேலும் படிக்க...
கொங்கோவில் விமானம் விபத்து – 14 பேர் பலி

கொங்கோவில் ஏற்பட்ட விமான விபத்தில் இராணுவ அதிகாரிகள் உள்பட 14 பேர் பலியாகியுள்ளனர். கொங்கோவில் தென்மேற்கே கிக்வித் நகரில் இருந்து கின்ஷாசா நகர் நோக்கி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில், லெப்டினென்ட் ஜெனரல் முதும்போ கடாளை தியண்டே மற்றும் லெப்டினென்ட்மேலும் படிக்க...
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்னிடம் கேள்வி கேட்பதா? பாகிஸ்தான் செய்தியாளரின் கேள்விக்கு ஜெய்சங்கரின் ஆவேச பதில்

ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி சர்ச்சைக்குள்ளானது. பாகிஸ்தானில் இடம்பெறும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவளிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் அங்குள்ள சீக்கியத் தலைவர்கள்மேலும் படிக்க...
முதலமைச்சர் விஜய் திங்கட்கிழமை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்ல திட்டம்

எதிர்வரும் திங்கட்கிழமை மதுரைக்கு செல்லும் தமிழக முதலமைச்சர் விஜய், மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதலமைச்சரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சரான பின்னர் ஜோசப் விஜய் முதன்முறையாக மதுரைக்குமேலும் படிக்க...
பேராதனைப் பல்கலைக் கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

உலகப் பல்கலைக்கழகங்களின் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் செயல்திறனை மதிப்பிடும் 2026 ஆம் ஆண்டுக்கான “UI GreenMetric World University Rankings” தரவரிசையில், பேராதனைப் பல்கலைக்கழகம் இலங்கையின் முதலிடப் பல்கலைக்கழகமாகத் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. “நிர்வாகம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஒருங்கிணைந்தமேலும் படிக்க...
சிலிண்டர் வெடித்ததில் வைத்தியசாலை ஊழியர்கள் ஏழு பேர் காயம்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். வைத்தியசாலை சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த சிறுநீரக வைத்தியசாலை ஊழியர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிப்புச் சம்பவத்தால் வைத்தியசாலைமேலும் படிக்க...
மட்டக்களப்பில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

தமிழர் தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் இன்று (26) மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.மேலும் படிக்க...
முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு இறுதிநாள் நினைவேந்தல்

தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை (26) முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...
தியாக தீபம் திலீபன் 39ம் ஆண்டு நினைவேந்தல் இன்று

தமிழ் மக்கள் உரிமைகளுடன் தாயக மண்ணில் தலைநிமிர்ந்து வாழ்வதை உறுதிசெய்வதற்காய் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி, இறுதியில் வல்லரசுகளின் மௌனத்தால் தன் இன்னுயிரை நீத்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்தியத்தின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தியாகி திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.மேலும் படிக்க...
