Main Menu

‘பெக்கோ சமன்’ தாயார் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாயார் உயிரிழந்த சம்பவத்திற்கு உதவியதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபர் தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, மித்தெனிய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞராவார்.

இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் “ஐஸ்” போதைப்பொருளுடன் கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் போதே, ‘பெக்கோ சமன்’ தாயார் உயிரிழந்த சம்பவத்துடன் அவருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மித்தெனிய காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட அவர், வலஸ்முல்ல நீதவான் முன்னிலையில் நேற்று பிரசன்னப்படுத்தப்பட்டார்.

அவரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.