Day: August 24, 2026
பிரான்ஸ்: உயர்நிலைப் பாடசாலைகளில் செல்போன் தடை: கல்வி ஊழியர்கள் அதிருப்தி

கல்வியாண்டு தொடங்கும் தருணத்தில் உயர்நிலைப் பாடசாலைகளில் மாணவர்கள் செல்போன்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் திட்டம் குறித்து கல்வித் துறை ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த முடிவு மற்றும் அதற்கான நடைமுறை வழிகாட்டுதல்கள் தங்களுக்கு மிகவும் தாமதமாகவே தெரிவிக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். புதியமேலும் படிக்க...
இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து காணிகளையும் விடுவிக்க வேண்டும் – சாணக்கியன்

வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பொதுமக்களின் காணிகளையும் விடுவிப்பதற்கான தெளிவான மற்றும் காலவரையறை கொண்ட வேலைத்திட்டத்தை அரசாங்கம் உருவாக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட சில காணிகளை மட்டும் விடுவிப்பது போதுமானதல்ல. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பொதுமக்களின்மேலும் படிக்க...
வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு தளர்வு – அரச வருமானம் அதிகரிப்பு

பல ஆண்டுகளுக்குப் பிறகு வாகன இறக்குமதிக்கான தடையை நீக்கியதன் மூலம், 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் வருவாய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. நிதி அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, 2026 ஜனவரி முதல் ஜூன்மேலும் படிக்க...
‘பெக்கோ சமன்’ தாயார் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாயார் உயிரிழந்த சம்பவத்திற்கு உதவியதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்தேகநபர் தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவுமேலும் படிக்க...
பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திங்களன்று (24) சட்டமன்றத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிகளாக உள்ள பெண்களுக்கு ஆண்டுதோறும் மூன்று இலவச சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள்மேலும் படிக்க...
நியூஸிலாந்தில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை?
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருப்பதாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் திங்களன்று (24) தெரிவித்தார். இச்சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு அவற்றின் உலகளாவிய வருவாயில் 10% வரை அபராதம் விதிக்கவும்மேலும் படிக்க...
சமிந்த விஜேசிறிக்கு பிணை

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தண்டனைக்கு எதிராகத் தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீடுமேலும் படிக்க...
வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

ரூ.330 மில்லியன் செலவில் நிர்மாணம் – தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கேற்பு யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (24) காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்மேலும் படிக்க...
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் வருகை: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக, புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் (Eric Meyer) கடந்த ஆகஸ்ட் 22 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இலங்கைக்கான 29 ஆவது அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அவர், தனதுமேலும் படிக்க...
22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 21 மனுக்கள் தாக்கல்

அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டமூலம் மக்களின் இறையாண்மையையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதிக்கக்கூடும் என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர். ‘Vinivida’ அறக்கட்டளையின் பொருளாளர் சுனில் ஜெயசுந்தர,மேலும் படிக்க...

