ஐரோப்பிய பந்தயப் பயிற்சியில் நடிகர் அஜித்தின் சிற்றூந்து விபத்து
ஐரோப்பாவில் நடைபெறும் சர்வதேச சிற்றூந்து பந்தயப் பயிற்சியின் போது நடிகர் அஜித் குமார் ஓட்டிய சிற்றூந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான நிலையில், அவர் காயங்களின்றிப் பாதுகாப்பாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ‘மிச்சலின் லீ மேன்ஸ்’ கிண்ணத்துக்கான சிற்றூந்து பந்தயப் பயிற்சியில் நடிகர் அஜித் ஈடுபட்டிருந்தபோது, அவர் ஓட்டிய சிற்றூந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அவருக்கு எந்தவிதக் காயமும் ஏற்படவில்லை என்றும், அவர் முழுப் பாதுகாப்புடன் நலமாக உள்ளார் என்றும் அஜித் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக சிற்றூந்து பந்தயப் பயிற்சிகளின் போது அஜித் ஓட்டிய சிற்றூந்து சில முறை விபத்துக்குள்ளாகியிருந்த நிலையிலும், அவர் தொடர்ந்து தனது பந்தயப் பயணத்தைத் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
