Main Menu

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம்

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தைச் சேர்ந்த 31 பேருக்கு அரசுப் பணி வழங்கி பிறப்​பித்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.

கரூரில் கடந்த 2025 செப்​.27-ம் தேதி நடந்த தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு தவெக சார்​பில் ரூ.20 லட்​சம் நிவாரணம் வழங்​கப்​பட்​டது. தவெக ஆட்சி அமைந்த பிறகு, உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு அரசு வேலை வழங்க முடிவு செய்​யப்​பட்​டது.

கரூரில் கடந்த 10-ம் தேதி நடந்த நிகழ்​வில் உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தைச் சேர்ந்த 31 பேருக்​கு, அவர்​களது கல்​வித் தகு​திக்கு ஏற்ப பல்​வேறு துறை​களில் இளநிலை உதவி​யாளர், அலு​வலக உதவி​யாளர் உள்​ளிட்ட பணிக்​கான ஆணை​களை முதல்​வர் விஜய் வழங்​கி​னார்.

முன்​ன​தாக, கரூர் சம்​பவத்​தில் உயி​ரிழந்​தோர் குடும்​பத்​துக்கு அரசுப் பணி வழங்க தடை விதிக்​கக் கோரி நாதக நிர்​வாகி தீரன் திரு​முரு​கன், மதுரை வழக்​கறிஞர் சீனி அகமது மற்​றும் சந்​தோஷ்கு​மார் ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் பொதுநல மனுக்​கள் தாக்​கல் செய்​தனர்.

‘கரூர் சம்​பவம் தொடர்​பான சிபிஐ விசா​ரணை உச்ச நீதி​மன்​றத்​தின் நேரடி கண்​காணிப்​பில் உள்​ளது. உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு அரசு வேலை வழங்​கு​வது விசா​ரணையை பாதிக்​கும். மேலும், சாட்​சிகளைக் கலைக்​கும் நடவடிக்​கை​யாகும். இது தவறான முன்​னு​தா​ரணத்​தை​யும் ஏற்​படுத்​தும். போட்​டித் தேர்​வு, தகுதி அடிப்​படை​யில் மட்​டுமே அரசுப் பணி வழங்க வேண்​டும். எனவே சிபிஐ, உச்ச நீதி​மன்ற விசா​ரணை முடி​யும் வரை அரசு வேலை வழங்​கத் தடை விதித்து உத்​தர​விட வேண்​டும்’ என்று மனுக்​களில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுக்​கள் முதல்​முறை​யாக விசா​ரணைக்கு வந்​த​போது, ‘உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்கு தற்​காலிகப் பணியே வழங்க வேண்​டும். இப்​பணி, வழக்​கின் இறுதி தீர்ப்​புக்கு கட்​டுப்​படும்’ என உத்​தர​விட்டு விசா​ரணையை நீதிப​தி​கள் தள்​ளி​வைத்​தனர்.

இந்​நிலை​யில், நீதிப​தி​கள் சி.​வி.​கார்த்​தி​கேயன், ஆர்​.சக்​திவேல் அமர்​வில் இந்த மனுக்​கள் நேற்று விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது நடை​பெற்ற வாதம்:

மனு​தா​ரர்​கள் தரப்​பு: அரசுப் பணிக்​கான போட்​டித் தேர்​வுக்​காக லட்​சக்​கணக்​கான இளைஞர்​கள் இரவு, பகலாக தயா​ராகி வரு​கின்​றனர். அப்​படி இருக்க, நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்கு அரசுப் பணி வழங்​கு​வது சட்ட விரோதம். கருணை அடிப்​படையில் பணி எப்​படி வழங்க வேண்​டும் என்​பது தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் பல வழி​காட்​டு​தல்​களை வழங்​கி​யுள்​ளது. அதை பின்​பற்​றாமல் அரசுப் பணி வழங்​கப்​பட்​டுள்​ளது.

பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினருக்கு இழப்​பீடு வழங்​கிய பிறகும், அரசுப் பணி வழங்க வேண்​டிய அவசி​யம் என்ன? ஸ்டெர்​லைட் துப்​பாக்​கிச்​சூடு, மதுரை கவுன்​சிலர் லீலா​வதி கொலை சம்​பவங்​களில் பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினருக்கு அரசுப் பணி வழங்​கிய​தாக அரசுத் தரப்பு கூறுகிறது. அந்த சம்​பவங்​களு​டன் கரூர் சம்​பவத்தை ஒப்​பிட முடி​யாது.

அரசுத் தரப்​பு: பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினருக்கு தற்​காலிகப் பணி​யே, அது​வும் சாதா​ரணப் பணியே வழங்​கப்​பட்​டுள்​ளது. இதற்கு முன்​பும் இது​போன்ற பல சம்​பவங்​களில் உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​துக்கு கருணைப் பணி வழங்​கப்​பட்​டுள்​ளது. இது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதி​மன்​றம் தலை​யிட முடி​யாது.

பாதிக்​கப்​பட்​டோர், தங்​கள் குடும்​பத்​தில் விலைம​திக்க முடி​யாத ஒரு​வரை இழந்​துள்​ளனர். அவர்​களுக்கு உதவும் வகை​யில்​தான் அரசுப் பணி வழங்​கப்​பட்​டுள்​ளது. இதனால் வழக்கு விசா​ரணை எந்த வகை​யிலும் பாதிக்​காது. ரூ.10 லட்​சம் இழப்​பீடு போது​மான​தாக இருக்​காது என்​ப​தாலேயே அரசுப் பணி வழங்​கப்​பட்​டுள்​ளது.

வயது, கல்​வித் தகுதி தொடர்​பான வழி​காட்​டு​தல்​களைப் பின்​பற்​றியே கருணைப் பணி வழங்​கப்​பட்​டுள்​ளது. இதை ஏன் எதிர்க்க வேண்​டும்? ஒவ்​வொரு துறை​யிலும் காத்​திருப்​போர் பட்​டியல் உள்​ளது. அதை பரிசீலித்து முறைப்​படியே பணி நிரந்​தரம் செய்​யப்​படு​வார்​கள். உடனடி​யாக பணி நிரந்​தரம் செய்​யப்பட மாட்​டார்​கள். இந்த மனுக்​கள் விசா​ரணைக்கு உகந்​தது அல்ல. அவற்றை தள்​ளு​படி செய்ய வேண்டும்.

டிஎன்​பிஎஸ்சி தரப்​பு: உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசுப் பணி வழங்​கிய​தில் டிஎன்​பிஎஸ்​சிக்கு தொடர்பு இல்​லை. கருணைப் பணி பெற்​றவர்​களின் பணியை நிரந்​தரம் செய்ய டிஎன்​பிஎஸ்சி ஒப்​புதல் பெறும் நடை​முறை​யில் விலக்கு பெறப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு வாதம் நடந்​தது.

இதன்​பிறகு, நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு: கரூர் விசா​ரணையை உச்ச நீதி​மன்​றம் கண்​காணிக்​கும் சூழலில் அதுபற்றி கருத்து தெரிவிக்க நீதி​மன்​றம் விரும்​ப​வில்​லை. அதே​நேரம், அரசுப் பேருந்து விபத்​துகள், சிவ​காசி பட்​டாசு ஆலை விபத்​துகளில் உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​துக்​கும் இதே​போல அரசு வேலை கேட்​டால் என்ன செய்​வது என்ற கேள்வி எழுகிறது.

ராணுவத்​தில் உயி​ரிழப்​போர் குடும்​பத்​தினருக்கு அரசுப் பணி வழங்​கு​வ​தாக அரசுத் தரப்பு கூறுகிறது. அதை​யும், கூட்ட நெரிசலில் உயி​ரிழப்​போரை​யும் ஒப்​பிட முடி​யாது. இதை ஏற்​றுக்​கொண்​டால் உயி​ரிழப்​போரின் குடும்​பத்​தினர் அனை​வரும் அரசு வேலை கேட்​பார்​கள். இதனால் அரசு நிர்​வாகம் பாதிக்​கும். கருணை அடிப்​படையி​லான வேலை என்​பது அரசுப் பணி​யில் இருந்து உயி​ரிழப்​போரின் வாரிசுகளுக்கு வேலை வழங்க மட்​டுமே பொருந்​தும்.

அரசு வேலை​வாய்ப்​புக்​காக லட்​சக்​கணக்​கானோர் காத்​திருக்​கின்​றனர். அதுகுறித்த விவரங்​களை டிஎன்​பிஎஸ்சி அளிக்​கும் என எதிர்​பார்த்​தோம். ஆனால், பணி நிரந்​தரத்​துக்கு ஒப்​புதல் பெற விலக்கு பெறப்​பட்​டுள்​ளது என்று மட்​டுமே தெரி​வித்​துள்​ளனர். கரூர் சம்​பவத்​தில் உயி​ரிழந்த குடும்​பத்​தினருக்கு அரசு உதவி செய்​வ​தாக இருந்​தால் பாதிக்​கப்​பட்​டோர் குடும்​பத்​தினருக்கு திறன்​ பயிற்​சிகளை வழங்கி உதவலாம். இவ்​வாறு பணி வழங்​கு​வதை​விட அது பயனுள்​ள​தாக இருக்​கும்.

அரசுப் பணி​யில் எது​வும் சாதா​ரணப் பணி அல்ல. அது ஒரு​வரது குடும்​பத்​துக்கு உதவும் பணி​யே. எனவே, கரூர் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​துக்கு அரசுப் பணி வழங்கி பிறப்​பித்த அரசாணை ரத்து செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தர​வில் கூறி​யுள்​ளனர்.

ஊதி​யம் பெறும் முன்பே வேலை இழப்பு: கரூரில் பணி நியமன ஆணை வழங்​கப்​பட்ட அதே நாளில் (ஜூலை 10) இந்த வழக்​கு​கள் விசா​ரணைக்கு வந்​த​போது, ‘தற்​காலிகப் பணி​தான் வழங்க வேண்​டும். பணி நியமனங்​கள் நீதி​மன்​றத்​தின் இறுதி தீர்ப்​புக்கு கட்​டுப்​படும். அரசுப் பணி பெற்​றவர்​கள் முதல் மாத ஊதி​யம் பெறு​வதற்கு முன்பு வழக்​கில் தீர்ப்பு அளிக்​கப்​படும்’ என்று நீதிப​தி​கள் அறி​வித்​தனர்.

அதன்​படி, 17 நாட்​களில் வி​சா​ரணை முடிந்து தீர்ப்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது. அவர்​கள் முதல்​ மாத ஊதி​யம்​ பெறு​வதற்​கு முன்​பாகவே பணி நியமனம்​ செல்​லாது என உயர்​ நீ​திமன்​றம்​ உத்​தரவிட்​டுள்​ளது.

உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு: சட்டத் துறை அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஆங்கில ஊடகத்துக்கு தமிழக சட்டத் துறை அமைச்சர் நிர்மல்குமார் நேற்று அளித்த பேட்டியில் கூறும்போது, ‘‘நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்கவே விரும்புகிறோம். இந்த வழக்கில் பணி நியமனம் பெற்ற பயனாளிகள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படவில்லை.

அவர்களது தரப்பு கருத்துகளைக் கேட்காமலேயே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க ஒருவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். எனவே, உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். இதுதொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.