Main Menu

பிரிஸ்டல் துப்பாக்கிச் சூடு; மூவர் கைது

பிரிஸ்டலில் நேற்று (01) நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 02:30 மணியளவில் கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஏவன் மற்றும் சோமர்செட் (Avon and Somerset) பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவருக்கு உதவியதாகச் சந்தேகத்தின் பேரில், 20 வயது மதிக்கத்தக்க மற்றுமோர் ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரிஸ்டலில் நகரின் ஸ்பீட்வெல் சாலையில் கார் ஒன்றில் பயணித்தவரை இலக்கு வைத்து உள்ளூர் நேரப்படி புதன்கிழமை பிற்பகல் 01.47 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு முன்னெடுக்கப்பட்டது.

இதை அடுத்து பாதுகாப்புக் காரணங்களுக்காக பிரிஸ்டலில் அமைந்துள்ள நான்கு பாடசாலைகளும், சாலைகளும் மூடப்பட்டன.

மேலும், சம்பவத்தில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அதேநேரம், இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் எவரேனும் இருந்தால், காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.