கனமழையிலும் தம்பலகாமத்தில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு
திருகோணமலை, தம்பலகாமம் நான்கு வாசல் பிள்ளையார் ஆலய முன்றலில் தம்பலகாம இளைஞர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு வியாழக்கிழமை (27)கொட்டும் கனமழையிலும் இடம் பெற்றது.
வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவு கூறும் முகமாக சுடரேற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழினத்தின் விடுதலைக்காக போராடி உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை இந்த நேரத்தில் அக வணக்கத்துடன் இயற்கையின் பேரிடரை கூட பாராமல் நினைவேந்தலை முன்னெடுத்தனர். வடகிழக்கின் மாவீரர் துயிலுமில்லங்களிலும் மாவீரர் தின நினைவஞ்சலி முன்னெடுக்கப்பட்டது.
பகிரவும்...