Main Menu

இந்திய மீனவர்கள் 23 பேர் நிபந்தனையுடன் விடுவிப்பு

கைது செய்யப்பட்டட 23 இந்திய மீனவர்களும் யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் இன்று (03) நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்புக்கு அண்மையில் அத்துமீறி மீன்பிடியில ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 23 பேரும் இன்று செவ்வாய்க்கிழமை (03) யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதவான் நளின சுபாஸ்கரன் முன்னிலையில் முற்படுத்தப்படுத்தப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கினை ஆராய்ந்த நீதவான் இந்திய மீனவர்கள் 23 பேருக்கும் 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

அத்துடன் இந்த 23 பேரில் 3 பேர் படகோட்டிகள் என்பதால் அவர்களுக்கு தலா 4 மில்லியன் அபராத தொகை விதிக்கப்பட்ட அதேவேளை, 6 மாத சிறைத்தண்டனையும் மேலதிகமாக வழங்கி உத்தரவிட்டார்.

அபராத தொகையை செலுத்தத் தவறினால் 6 மாதங்கள் சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 3 மாத சிறைத்தண்டனை  அனுபவிக்கவேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.