பெய்ரூட்டில் மீண்டும் தாக்குதல்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் ஒரு வட்டாரத்திலிருந்து வெளியேறுமாறு பொது மக்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்ட ஒரு மணி நேரத்துக்குள் அங்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
AFP செய்தியாளர் அதனை நேரில் பார்த்ததாகக் கூறினார்.
கட்டடங்களுக்கு இடையே கரும்புகை வெளியேறியதைக் கண்டதாக அவர் சொன்னார்.
அதனைத் தொடர்ந்து 2ஆவது தாக்குதல் நடத்தப்பட்டது.
அண்மை வாரங்களில் இஸ்ரேலிய ராணுவம் பெய்ரூட்டின் தென்பகுதிகளைக் குறிவைத்துத் தொடர்ந்து தாக்கி வருகிறது.
கடந்த மாதம் இஸ்ரேலிய ராணுவத்தால் தொடங்கப்பட்ட தாக்குதல்களில் இதுவரை 1,300க்கும் அதிகமானோர் மாண்டனர் என்று AFP, லெபனான் சுகாதார அமைச்சு ஆகியவை கூறுகின்றன.
பகிரவும்...