Main Menu

AI பயன்படுத்துவதில் சிங்கப்பூர்ப் பெண்களுக்கு முதலிடம்

சிங்கப்பூர்ப் பெண்கள், செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தை உலகின் மற்ற நாடுகளில் இருப்போரைக் காட்டிலும் சிறப்பாகப் பயன்படுத்துகின்றனர்.

Similarweb மென்பொருள் நிறுவனத்தின் தரவுகள் அவ்வாறு கூறுகின்றன.

சிங்கப்பூரில் AI சாதனங்களைப் பயன்படுத்துவோரில் 47 விழுக்காட்டினர் பெண்கள். உலகச் சராசரியான 43 விழுக்காட்டைவிட அது அதிகம்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குப் பள்ளிகளில் திட்டங்கள் உள்ளன.

பொதுமக்களுக்கு உதவிசெய்யவும் சில திட்டங்கள் இருக்கின்றன.

சில பிரிவினர் விடுபட்டுப்போவதற்குச் சாத்தியம் உள்ளதா என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

அத்தகையோரை அடையாளம் கண்டு உதவிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் (Rahayu Mahzam) பதில் தந்தார்.

பகிரவும்...