Main Menu

எத்தியோப்பியாவில் அம்ஹாரா இனக் குழுவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை!

எத்தியோப்பிய கிளர்ச்சிக் குழுவொன்று அம்ஹாரா இனக்குழுவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை படுகொலை செய்துள்ளது.

அதிகாரிகள் மற்றும் செய்தி அறிக்கைகளின்படி, ஆபிரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் உள்நாட்டுப் போருக்கு மத்தியில் பதிவான சமீபத்திய கொடூர படுகொலையாக இது பார்க்கப்படுகின்றது.

எத்தியோப்பியாவின் மிகப்பெரிய பிராந்தியமான ஒரோமியாவில் உள்ள டோல் என்ற கிராமத்தை, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரோமோ லிபரேஷன் ஆர்மி உறுப்பினர்கள் தாக்கியதில் குறைந்தது 230பேர் கொல்லப்பட்டதாக சாட்சிகளும் அதிகாரிகளும் தெரிவித்தனர்.

ஓரோமோ லிபரேஷன் ஆர்மி- ஓ.எல்.ஏ என அழைக்கப்படும் கிளர்ச்சிக் குழு, எத்தியோப்பிய அரசாங்கத்தால் ஒரு பயங்கரவாத அமைப்பாக பார்க்கப்படுகின்றது.

ஆனால், ஒரோமோ லிபரேஷன் ஆர்மி கொலைகளை மேற்கொள்வதை மறுத்தது மற்றும் பிரதமர் அபி அகமதுவை ஆதரிக்கும் பிராந்திய அரசாங்கத்துடன் இணைந்த போராளிகளால் அவை செய்யப்பட்டதாகக் கூறியுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் முதல் டிக்ரேயின் வடக்குப் பகுதியில் தொடங்கிய கிளர்ச்சியை அடக்குவதற்கு அரசாங்கமும் அதன் கூட்டாளிகளும் முயற்சித்ததில் இருந்து நாட்டை உலுக்கிய மிக மோசமான இன வன்முறைகளில் ஒன்றாக இந்தத் தாக்குதல் அமைந்துள்ளது.

பகிரவும்...