Main Menu

Île-de-France இற்குள் தடுப்பூசி நிலையங்கள் விடுமுறைக் காலத்திலும் திறந்திருக்கும்

விடுமுறை காலத்திலும் Île-de-France இற்குள் தடுப்பூசி நிலையங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடப் பிறப்பு ஆகிய விடுமுறை நாட்களில், தடுப்பூசி போடும் பணிகள் தடையின்றி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Île-de-Franceக்குள் உள்ள பெரும்பாலான தடுப்பூசி மையங்கள் வழமைபோல் திறக்கப்படுகின்றன.

சில தடுப்பூசி நிலையங்கள் மட்டும் பகல் 2 மணிக்குப் பின்னர் திறக்கப்படும் எனவும், ஏனையவை வழக்கம் போல் காலை 9 மணிக்கு திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் டிசம்பர் 31 ஆம் திகதி, ஜனவரி 1 ஆம் திகதி அன்றும் தடுப்பூசி மையங்கள் திறந்திருக்கும். 

பகிரவும்...