Main Menu

ஜேர்மனியில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிப்பு!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பரவுவதை மெதுவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிக்கும் என அதிபர் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ‘அதிக எண்ணிக்கையிலான தொற்றுநோய்களைக் கருத்தில் கொண்டு, கிறிஸ்மஸுக்கு முன்னர் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள், நிச்சயமாக ஜேர்மனியின் பெரும்பாலான பகுதிகளுக்கு ஜனவரி ஆரம்பம் வரை தொடர்ந்து செல்லுபடியாகும் என்று நாங்கள் கருதுகிறோம்.

துரதிர்ஷ்டவசமாக, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கு கட்டுப்பாடுகளை எளிதாக்குவது குறித்து நாங்கள் உறுதியளிக்க முடியாது என்று சொல்ல வேண்டும். கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி 10பேர் வரை குழுக்களாக ஜேர்மானியர்கள் கூடிவருவார்கள். ஜேர்மனியில் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை மிக உயர்ந்த மட்டத்தில் தேங்கி நிற்கிறது’ என கூறினார்.

ஜேர்மனியில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை 22,268 அதிகரித்து 983,588ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 389 அதிகரித்து 15,160 ஆக உயர்ந்துள்ளது.

பகிரவும்...