Main Menu

ட்ரம்பினால் மாத்திரமே தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடியும் – நூர் பின்லேடின்

ட்ரம்பினால் மாத்திரமே தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடியும் என ஒசாமா பின்லேடனுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒசாமா பின்லேடனின் மூத்த சகோதரர் யெஸ்லாம் பின்லேடினின் மகள் நூர் பின்லேடின் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘உலகில் ஒரே ஒரு மனிதனால் மட்டுமே ஒசாமா பின்லேடன் கும்பலிடமிருந்து நம்மைக் காப்பாற்ற முடியும்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பால் மட்டுமே, அமெரிக்காவை காப்பாற்ற முடியும்.

அவரை எதிர்த்து போட்டியிடும் பைடன், அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதல் அமெரிக்காவில் நிகழலாம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அமெரிக்காவில் அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்திய 4 தாக்குதல்களில் 2,977 பேர் கொல்லப்பட்டனர்.

25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு சூத்திரதாரிய செயற்பட்ட ஒசாமா பின்லேடன், சம்பவம் நடந்த சில ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...