Main Menu

பிரான்ஸில் கத்திக்குத்து நடத்திய தாக்குதல்தாரியின் விபரங்கள் வெளியீடு!

பிரான்ஸில் மூவர் மீது கத்திக்குத்து நடத்திய, தாக்குதல்தாரியின் விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

வில்லேஜுயிஃப் நகரின் பார்க் டெஸ் ப்ரூயர்ஸ் பகுதியில் உள்ள பூங்காவில் நேற்று (வெள்ளிக்கிழமை) 2 மணியளவில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிந்ததோடு, இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது, பொலிஸார், தாக்குதல்தாரியை கைதுசெய்ய முற்பட்ட போது தொடர்ந்து தாக்குதல் நடத்த முற்பட்டதால அவரை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.

இந்த நிலையில் இத்தாக்குதல் சம்பவம் மற்றும் தாக்குதல்தாரியின் விபரங்ளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்த தாக்குதலின் போது இரு தம்பதியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பின்னர் ஒரு பெண்னொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் 22 வயதுடைய பெண்னை தாக்க முற்பட்ட போது, அதனை தடுக்க முயன்ற 56 வயதான அவரின் கணவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

தாக்குதலாரி பரிஸைச் சேர்ந்த இளைஞன் எனவும், சமீபத்தில் இஸ்லாம் மதத்தினை தழுவிக்கொண்டவர் எனவும் அறிய முடிகிறது.

தாக்குதலாளியின் பெயர் பொலிஸாரால் வெளியிடப்படவில்லை என்றபோதும், குறித்த இளைஞன் 1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி பிறந்த 22 வயதுடையவர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலாளி வைத்திருந்த கைப்பைக்குள் குர்ரான் மற்றும் சில இஸ்லாமிய புத்தகங்கள் இருந்ததாகவும், ஆனால் இவை சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் தாக்குதலாரியின் வீட்டுக்குச் சென்றிருந்ததாகவும், ஆனால் அங்கு யாரையும் கைது செய்யவில்லை எனவும் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...