Main Menu

முப்படைகளின் தலைமை தளபதி யார்?

இந்தியாவின் முதலாவது முப்படை  தலைமை தளபதி யார் என்பது குறித்த தகவல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ராணுவ விவகாரங்களில் மத்திய அரசுக்கு நேரடித் தொடர்பில் இருக்கும் வகையில் இந்த புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை கடந்த 24 ஆம் தேதி மத்திய அமைச்சரவை வழங்கியது.

4 நட்சத்திர அந்தஸ்து கொண்ட முப்படை தலைமை தளபதி, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும்  ராணுவ விவகாரங்களுக்கான துறையின் தலைமைப் பொறுப்பையும் வகிப்பார்.ஒருங்கிணைந்த  முப்படைகளின் ராணுவக் கட்டுப்பாடு  இவரிடம் இருக்கும். 

கார்கில் போர் ஆய்வுக் குழு மற்றும் நரேஷ் சந்திர கமிட்டியின் பரிந்துரையின் பேரில் முப்படைகளுக்கான தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டுள்ளது.