Main Menu

மூடநம்பிக்கையால் சூரிய கிரகணத்தின் போது கழுத்து வரை புதைக்கப்பட்ட குழந்தைகள்

கர்நாடகாவில் சூரிய கிரகணத்தின் போது மூடநம்பிக்கை காரணமாக மாற்றுத்திறனாளி குழந்தைகளை கழுத்துவரை மண்ணில் புதைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரிய வானியல் நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்த நிலையில் கர்நாடக மாநிலம் கலாபுராகி பகுதியில் சிலர் மாற்றுத் திறனாளி குழந்தைகளை கழுத்து வரை மண்ணில் புதைத்து வைத்த காட்சிகள் வெளியாகின.

சூரிய கிரகணத்தின் போது இவ்வாறு புதைத்து வைத்தால், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குறைபாடு சரியாகிவிடும் என்ற மூடநம்பிக்கையின் காரணமாக குழந்தைகளை புதைத்து வைத்தது தெரிய வந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பகிரவும்...