Main Menu

ஓய்வூதியச் சீர்திருத்தங்களை ஆராய பிரான்ஸ் புதிய அரசியல்வாதியை நியமித்துள்ளது!

பிரான்ஸின் ஓய்வூதிய முறைமைக்கான சீர்திருத்தங்களை ஆராயும் புதிய அரசியல்வாதியாக லோரன்ற் பியற்ராஸ்செவ்ஸ்கி (Laurent Pietraszewski) நியமிக்கப்பட்டுள்ளார்.

முந்தைய ஓய்வூதிய சீர்திருத்த அதிகாரி சார் ஜீன்-போல் டெலவோய் (tsar Jean-Paul Delevoye) ராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை) புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் ஓய்வூதிய முறைகளை மாற்றியமைக்க ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் திட்டங்களை முக்கிய தொழிற்சங்கங்கள் எதிர்த்தன. அவை நாடு தழுவிய போராட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் ஆரம்பித்திருந்தன.

நேற்று பதின்மூன்றாம் நாள் வேலைநிறுத்தத்தின் போது பிரான்ஸின் போக்குவரத்து வலையமைப்புகள் முடங்கியிருந்தன மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டன.

அத்துடன், கிறிஸ்துமஸ் பண்டிகை நிமித்தம் எந்தக் காலஅவகாசமும் வழங்கப்படாது என்றும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பகிரவும்...