Main Menu

நெதர்லாந்து மகாராணியார் பாகிஸ்தானுக்கு விஜயம்

நெதர்லாந்தின் மகாராணியான மெக்சிமா (Maxima) எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் சிறப்பு வழக்கறிஞராக அவர் விஜயம் செய்யவுள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், ‘நவம்பர் 25 முதல் 27 ஆம் திகதிவரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராணி மெக்சிமா (Maxima), பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் கான் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாட்டின் உள்ளடக்கிய நிதி மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்த உள்ள அவர், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவன தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே, ராணி மெக்சிமா (Maxima) கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...