Main Menu

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : பா.சிதம்பரத்தை சந்தித்தார் சோனியா!

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைக்கேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரத்தை காங்கிஸ் கட்சியின் தற்காலிக தலைவர், சோனியாகாந்தி மற்றும் முன்னாள் தலைவரான மன்மோகன்சிங் ஆகியோர் சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த சந்திப்பிற்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் விசாரணைகளுக்கு பிறகு டெல்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கு  காங்கிரஸ் தரப்பு கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.