80வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.சோமசுந்தரம் கனகராஜா (அசோகன்)
தாயகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரான்ஸ் Saint-Denis இல் வசிக்கும் சோமசுந்தரம் கனகராஜா (அசோகன்)அவர்கள் தனது 80வது பிறந்தநாளை 30ம் திகதி ஆகஸ்ட் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.
இன்று 80வது பிறந்தநாளை கொண்டாடும் கனகராஜா (அசோகன்) அவர்களை அன்பு மனைவி கமலாதேவி, அன்பு பிள்ளைகள் பிரதீபன் (லண்டன்), பிரபா (லண்டன்), பார்த்தீபன் (பிரான்ஸ்), தீபா (பிரான்ஸ்) மருமக்கள் ஜெகநாதன் (லண்டன்), வாசுகி (லண்டன்), விஜிதா (பிரான்ஸ்), சபேசன் TRTஅறிவிப்பாளர் (பிரான்ஸ்) பேரப்பிள்ளைகள் பிரமிளா, பிரியாசா , கபிலன், மயூரி, மகதி, பபிஷன்,விதிஷ், பைரீஸ், பைரவி
மற்றும் தாயகத்தில் தயாபரன் புஷ்பராணி குடும்பம், தாயகத்தில் வசிக்கும் சர்வானந்தன் சுசிலா குடும்பம், லண்டனில் வசிக்கும் கதிர்காமநாதன் குடும்பம், மற்றும் ஜெர்மனியில் வசிக்கும் கணேசனாதன் ஜோதிமாலா , சிவராஜா வசந்தி குடும்பம், ஜெயக்குமார் சியாமளா குடும்பம், பாலச்சந்திரன் நிமாலினி குடும்பம், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் சோமசுந்தரம் கனகராஜா அசோகன் அவர்கள் இன்று போல் தேக ஆரோக்கியத்துடன் ஆண்டவன் கிருபையில் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று 80வது பிறந்தநாளை கொண்டாடும் அசோகன் அவர்களை தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு அறிவிப்பாளர்கள் இன்று போல் என்றும் இறைவன் கருணையோடு தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம் .
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் பிரதீபன், பிரபா, பார்த்தீபன், தீபா
அனைவருக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.
எண்பது வயது காணும் அப்பா
எங்கே தொடங்குவது
எழுபத்து ஏழு கலவரத்தில்
உங்களை இழக்கப் பார்த்ததையா
எண்பத்து மூன்று கலவரத்தால்
நாட்டை விட்டு வந்ததையா
தொண்ணூறு தசாப்தத்தில்
படிக்க வைக்க எங்களை
பட்டங்கள் எடுக்க வைக்க
நீங்கள் பட்ட கஸ்டங்களையா
எங்கே தொடங்குவது
ஒன்று மட்டும் தெரியும்
உங்கள் அர்ப்பணிப்புக்கும்
விடாமுயற்சிக்கும் அளவேயில்லை
தந்தை மக்களுக்கு ஆற்றும் நன்றி
அவையத்து முந்தி இருப்பச் செயல்
நன்றிகள் பல கோடி அப்பா
அன்புடன்
பிரதீபன் பிரபா பார்த்தீபன் தீபா