Main Menu

70 வருடகால பிரச்சினைகள் தீர்க்கப்படும் : மகேஷ் சேனநாயக்க

நாட்டில் 70 வருட காலமாக பல பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அதனை கட்சியாக அல்ல சுயாதீனமாக நான் செய்யவுள்ளேன் என ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனநாயக்க தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிற்கும் சென்று மக்களை சந்தித்தேன். நல்லூர் கோவிலிற்கும் சென்றேன். மக்களின் பல பிரச்சினைகளை அறிந்த கொண்டேன்.

இந்த நாட்டில் 70 வருட காலமாக பல பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. சிங்களவர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பல்வேறு வேற்றுமைகள் இன்றும் நீக்கப்படவில்லை.

இந்த நாடு முழுவதும் யுத்தம் இல்லாது ஒருமைப்பாட்டுடன் இருக்கும் வகையில் இயலுமானவரை முயற்சிக்கவுள்ளேன். இவ்வாறான முரண்பாடுகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பதை சிந்திக்க வேண்டும்.

யுத்தம் எப்படி உருவானது? ஏன் உருவானது? சமாதானம் உருவானதன் பின்னர் பாதைகள் சீர்செய்யப்பட்டதை விட வேறு எதுவும் நடைபெறவில்லை. அதனால் மக்கள் நிம்மதியாகவோ, சந்தோசமாகவோ இருக்கின்றார்களா?இல்லை. மக்களின் தேவைகள் பூர்த்தி செய்து கொடுக்கப்படவில்லை. இவ்வாறான பல பிரச்சினைகள் தீர்க்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

பகிரவும்...