7 பில்லியனுக்கும் மேற்பட்ட சொத்துக்கள் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறு கிடைத்தது?
தௌஹித் ஜமாத் பயங்கரவாதிகள் கொண்டுள்ள சொத்துக்கள் பெறுமதி 7 பில்லியன்கள் என குற்றபுலனாய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளது. இதுவரை திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து இத்தொகை மதிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சம்பந்தப்பட்ட தற்கொலை குண்டுதாரிகளின் சிலரிடம் மாத்திரம் 140 மில்லியன் ரூபா இருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த 140 மில்லியன் ரூபாவில் ஒரு தொகை பணம் இவர்களிடமிருந்து திணைக்களம் கைப்பற்றியுள்ளது. மேலும் ஒரு தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் கண்டறியப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்தார். இந்த பணம் உள்ளிட்ட இவர்களது சொத்துக்களை தடை செய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மூலம் தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பயங்கரவாதிகள் கொண்டிருந்த பணம் மற்றும் சொத்துக்கள் இவர்களுக்கு எவ்வாறு கிடைத்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றன. இது குறித்து அவர்களது உறவினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதேவேளை குற்றப்புலனாய்வு திணைக்களமும் பயங்கரவாத தடுப்பு பிரிவும் தௌஹித் ஜமாத் மற்றும் இந்த தற்கொலை குண்டுதாரர்களின் உறவினர் அடங்களாக 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளன. இவர்களுள் 54 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விசாரிக்கப்படுகின்றன. இவர்களுள் 7 பேர் பெண்கள்.
பயங்கரவாத விசாரணை பிரிவின் கீழ் 19 பேர் விசாரிக்கப்படுகின்றன. இவர்களுள் இருவர் பெண்கள் என்றும் இவர் தெரிவித்தார்.