7ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு (14/12/2020)
தாயகத்தில் இளவாலையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் பாரிஸ் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்களின் 7ம் ஆண்டு நினைவு தினம் 14ம் திகதி டிசம்பர் மாதம் திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது.
அமரர்.திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்களை நினைவு கூருபவர்கள்.
அன்புப் பிள்ளைகள் – கருணாகரன் (நோர்வே), பிரபாகரன் (கனடா), பிறேமா (பிரான்ஸ்).
மருமக்கள் – சிவராணி (நோர்வே) , சுதாசினி (கனடா) ,கைலாயநாதன் (பிரான்ஸ்)
பேரப்பிள்ளைகள் – வாகினி, சுபாங்கன் (நோர்வே) ,கோபிதன், ஜஸ்மிதன், லக்சனா (கனடா) , சாரங்கன், விதுஷன், தீபிகா (பிரான்ஸ்)
மற்றும் தாயகத்தில் வசிக்கும் சகோதரர்கள், சகோதரிகள், பெறாமக்கள், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்புத் தாயை இன்றைய தினம் நினைவு கூருகிறார்கள்.
அன்னையின் 7ம் ஆண்டு நினைவுப் பிரார்த்தனையில் TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து தாயாரை நினைவு கூருகின்றோம்.
இன்று (14/12/2020) TRTதமிழ் ஒலி வானொலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருபவர்கள்,
அன்பு பேரப்பிள்ளைகள் வாகினி, சுபாங்கன், கோபிதன், ஜஸ்மிதன், லக்சனா, சாரங்கன், விதுஷன், தீபிகா
அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
“ஆண்டுகள் ஏழு ஓடி மறைந்தாலும் உங்கள் அன்பான
நினைவுகள் எம்மை விட்டு மறையாது
ஆயிரம் ஜென்மம் எடுத்து பிறந்தாலும் – அம்மா
உங்கள் கருவறையில் பிறக்கும் வரம் வேண்டும் தாயே!
உங்கள் அன்பு ஆசிகள் எங்கிருந்தாலும் கிடைக்க அருள் பாலிப்பாய் தாயே!”