60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம் (09/02/2019)
தாயகத்தில் திருநெல்வேலியை சேர்ந்த ஜேர்மனி Dortmund நகரில் வசிக்கும் நவரெட்ணம் நாகேந்திரம் அவர்கள் 4ம் திகதி வந்த தனது 60வது பிறந்தநாளை 9ம் திகதி பெப்ரவரி மாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.
இன்று 60வது பிறந்தநாளை கொண்டாடும் நவரெட்ணம் நாகேந்திரம் அவர்களை அன்பு மனைவி ரஜனி, அன்பு பிள்ளைகள் அனுஜா, அனோஜன், அஜந்தன் மற்றும் அண்ணாமார், அண்ணமார், அக்காமார்,அத்தான் மார், தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சாள்மார்,பெறாமக்கள், மருமக்கள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று 60வது பிறந்தநாளை கொண்டாடும் நவரெட்ணம் நாகேந்திரம் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் நல்ல தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்வென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் அனுஜா, அனோஜன், அஜந்தன் இவர்கள் அனைவருக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.
அப்பா
அல்லும் பகலும் உறக்கமின்றி
கடினமாக உழைத்து உழைத்து
தன்னைப் பற்றி யோசிக்காது
நித்தம் தனது உடலை வருத்தி,
உடல்நிலையைக் கூட மறந்து
வேர்வை சிந்தச் சிந்த,
எமக்காகப் பாடுபட்டு
எமக்காவே வாழும்
ஒரே உள்ளம், அப்பா!
உள்ளம் நிறைந்த அன்பும்
விழிகள் நிறைந்த கோபமும்
பிறருக்கு உதவும் மனப்பாங்கும்
உள்ளடக்கிய ஒரே உள்ளம் ,எம் அப்பா!
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைக் கொடுப்பதால்,
அதனை உயிரைவிட மேலானதாகக் கருதிக்
காத்தல் வேண்டும் போல், எம்மை வழி நடத்தும், நம் அப்பா!
கோர்த்திட வார்த்தைகள் இல்லை உங்களைப்பற்றிக் கூற
விலைமதிப்பில்லை உங்கள் ஆலோசனைகள்!
உலகில் எதுவும் ஈடு இணையில்லை உங்கள் உறவுக்கு முன்னால்!
நித்தமும் இறைவனுக்கு நன்றி சொல்வோம் அப்பா உங்களுக்காய்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!