Saturday, February 9th, 2019

 

கசோக்கி சவுதி அதிகாரிகளால் திட்டமிட்டு கொலை – ஐ.நா. அறிக்கையில் தகவல்

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அதிகாரிகளால் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டதாக ஐநா வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இதில் சவுதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சவுதி அரசு இதனை மறுக்கிறது. இந்த நிலையில் ஜமால் கசோக்கியின் கொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட், கடந்த மாதம் 28-ந்தேதி துருக்கி சென்றார். அங்கு அவர் கடந்த 3-ந்தேதி வரை பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தினார். அதனை தொடர்ந்து தனது விசாரணை குறித்த முதல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டார். அந்த அறிக்கையில், “சவுதி அரேபியமேலும் படிக்க…


மணிலாவில் தட்டம்மை தொற்றுநோய் தீவிரமாக பரவி எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தட்டம்மை தொற்றுநோய் தீவிரமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நாட்டு சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 19 ம் திகதி வரையான காலப்பகுதியில் 196 பேர் தட்டம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்தின் இந்த காலப்பகுதியில் 20 பேர் மாத்திரமே தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில், இந்த வருடத்தில் அந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன், இந்த தொற்றுநோய் காரணமாக இதுவரையில் சிறுவர்கள் உள்ளிட்ட 50 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, தடுப்பூசி ஏற்றப்படாத 2.4 மில்லியன் சிறுவர்கள் தட்டம்மை நோய்த் தொற்று அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


ஜூலை மாதம் விண்வெளிக்கு பயணிக்கும் பிரித்தானிய கோடீஸ்வரர்!

அடுத்து வரும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் தனது வேர்ஜின் நிறுவனத்தின் விண்கலத்தில் தாம் விண்வெளிக்கு பயணிக்கவுள்ளதாக பிரித்தானிய கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் தெரிவித்துள்ளார். மனிதன் நிலவில் முதன்முதலாக கால் பதித்து ஐம்பது வருடங்கள் பூர்த்தியடைவதை கொண்டாடும் வகையில் தனது பயணம் அமையவேண்டுமென விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் அப்பல்லோ 11 விண்கலம் 1969 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி முதன்முதலாக நிலவை சென்றடைந்தது. தமது வேர்ஜின் நிறுவனம் விண்வெளி பயணத்துக்கு தேவையான அனைத்து சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாகவும் ஜூலை மாதமளவில் தமது விண்வெளி பயணம் சாத்தியமானதாக அமையுமெனவும் ரிச்சர்ட் பிரான்சன் தெரிவித்தார்.


தாய்லாந்து இளவரசியின் அரசியல் மோகத்தால் அரச குடும்பத்துக்குள் மோதல்!

முன்னெப்போதும் இடம்பெறாத வகையில் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் தீர்மானத்தை தாய்லாந்து மன்னரின் மூத்த சகோதரி இளவரசி உப்போல்ரட்டன ராஜகன்யா சிறிவத்தனா பர்னாவதி நியாயப்படுத்தியுள்ளார். இதனிடையே தனது சகோதரி அரசியலில் ஈடுபடும் தீர்மானத்தை தாய்லாந்து மன்னர் மகா வஜ்ராலங்கோன் ‘முறையற்றது’ என்று சாடியுள்ளார். 67 வயதான இளவரசி பர்னாவதி அரசியலில் ஈடுபட்டால், பாரம்பரியமாக அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கும் மன்னர் குடும்பத்தின் வழக்கம் இத்துடன் முறிவைச் சந்திக்கும் என்று அவர் கருதுகிறார். “அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபடுவது, நாட்டின் பாரம்பரியம், வழக்கம் மற்றும் கலாசாரத்துக்கு முரணானது. எனவே இது மிகவும் முறையற்றதாக கருதப்படும்,” என்று மன்னர் மகா வஜ்ராலங்கோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்பாளர் நியமனத்தை ஏற்றுக்கொள்வது தாய்லாந்து பிரஜையாக தனக்கிருக்கும்மேலும் படிக்க…


இறந்துபோகும் என தெரிந்தும் குழந்தையை பெற்றெடுத்து உறுப்பு தானம் செய்த தாய்

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண், தன் வயிற்றில் வளரும் குழந்தை இறந்துபோகும் எனத் தெரிந்தும், அதனை பெற்றெடுத்து உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். அமெரிக்காவில் டேவிஸ் லோவட் – கிறிஸ்டா டேவிஸ் தம்பதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதற்கு ரைலே ஆர்கேடியா டயன் லோவட் என பெயரிட்டனர். கிறிஸ்டா கருவுற்று 18 வாரங்கள் ஆகியிருந்த நிலையில், அவரது வயிற்றில் இருக்கும் குழந்தை குறைபாடுகளுடன் உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்படி பிறக்கும்போதே மிகவும் அரிதான சில பாகங்கள் மூளையில் இல்லாமல் பிறந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் பெற்றோரிடம், குழந்தை 30 நிமிடத்திற்கு மேல் உயிருடன் இருக்காது என தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஆனால், அனைவரையும் ஆச்சரிப்பபடுத்தும் வகையில் மருத்துவர்களின் முயற்சியால் ஒரு வாரம் வரை உயிருடன் இருந்தாள். குழந்தைமேலும் படிக்க…


அதிமுக தலைமையில் மெகா கூட்டணி – மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாரளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைக்கிறது. இதில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளை சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. நாளை திருப்பூர் கூட்டத்தில் பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் இருவரும் கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்பு மாலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கி 6.15 மணிவரை நடந்தது. இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மேலும் படிக்க…


மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு தயாராகும் ஆந்திரா!

மத்திய அரசுக்கு எதிராக  ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது. ஆந்திர பிரதேச சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த ஆர்ப்பாட்டம் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) டெல்லியில் முன்னெடுக்கப்படவுள்ளது. இவ்வார்ப்பாட்டத்திற்காக 20 பெட்டிகளுடன் கூடிய இரண்டு புகையிரதங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவற்றுக்கு முதலமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பில் அழைப்பு விடுத்துள்ளார்.


7பேரையும் விடுவிக்க ஆளுனர் கையெழுத்திட வேண்டும் – அற்புதம்மாள்

கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க ஆளுனர் கையெழுத்திட வேண்டுமென்று அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். கரூர் ஜவகர்பஜாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “குற்றவாளிகள் தங்களது தண்டனை காலத்தில் குற்றத்தின் தன்மை அறிந்து மனம் திருந்த அமைக்கப்பட்டது தான் சிறைச்சாலை. மாறாக அவர்களை சித்ரவதை செய்யும் நோக்கில் அமைக்கப்பட்டதல்ல. சட்டத்தின் மூலம் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 28 ஆண்டுகளாக அந்த 7 பேரும் சிறையில் இருக்கின்றார்கள். அதே சட்டத்தின் மூலம் தமிழக ஆளுனர் கொலை குற்றவாளிகள் என கருதப்படும்  7 பேரையும் உடனே விடுதலை செய்ய கையெழுத்திட வேண்டும். ஆளுனர் கையெழுத்திடும் வரை எனது மக்கள் சந்திப்பு பயணம் தொடரும். அந்த 7 பேரும் விடுவிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானமேலும் படிக்க…


இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தத்திற்கு ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் – மங்கள

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டமையால், மார்ச் மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில், இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தம் மேலும் அதிகரிக்கும் என, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கை இணை அனுசரணை வழங்கி தீர்மானத்தை நிறைவேற்றியபோது மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக பணியாற்றியிருந்தார். இந்நிலையில் தற்போதைய நிலை குறித்து கருத்து தெரவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தாம் நடைமுறைப்படுத்தியபோதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு எதிராகச் செயற்பட்டதாகவும் குறிப்பாக தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவரது செயற்பாடுகளால் இலங்கை மீது சர்வதேச சமூகத்தின் அதிருப்தி அதிகரித்துள்ளது. இவ்வாண்டு இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தம் இன்னமும் அதிகரிக்கும். அதற்கு ஜனாதிபதி மைத்திரிபாலமேலும் படிக்க…


நாட்டின் சொத்துக்களை விற்று பொருளாதார ஸ்திரத்தை பேண முடியாது: மஹிந்த

நாட்டின் சொத்துக்களை விற்று பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய முடியாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெங்களூர் நகரில் ‘தி இந்து’ நாளிதழ் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில் இன்று (சனிக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ‘தி இந்து’ நாளிதழின் ஏற்பாட்டிலான மூன்று நாள் மாநாட்டில் கலந்துக் கொள்ளும் நோக்கில் எதிர்க்கட்சி தலைவர் நேற்று இந்தியாவிற்கு விஜயம் செய்தார். எதிர்க்கட்சி தலைவருடன், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.


நீதியான விசாரணையை எதிர்பார்க்க முடியாது – காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவினர்கள்

காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவராக இராணுவ அதிகாரி இருக்கும் வரை நீதியான விசாரணையை எதிர்பார்க்க முடியாது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசு கூற வேண்டுமென வலியுறுத்தியும் கறுப்புப்பட்டி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிடும் போதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அத்துடன், சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக கண் துடைப்பிற்காகவே காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழு அமைக்கப்பட்டதாகவும் அவர் விசனம் வெளியிட்டார்.


இனப்பிரச்சினை தீர்க்கப்படின் தேசிய அரசாங்கத்தை ஆதரிப்போம்: இராதாகிருஷ்ணன்

தேசிய அரசாங்கத்தை அமைப்பதனால், இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமானால், அதற்கு முழுமையான ஆதரவினை வழங்கத் தயார் என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மாறாக வெறுமனே அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, தேசிய அரசாங்கம் உருவாக்கப்படுமானால் அதனை நான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அமைச்சு பதவியினை தொடர்ந்தும் தக்க வைக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் இதன்போது தெரிவித்துள்ளார்.


60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம் (09/02/2019)

தாயகத்தில் திருநெல்வேலியை சேர்ந்த ஜேர்மனி Dortmund நகரில் வசிக்கும் நவரெட்ணம் நாகேந்திரம் அவர்கள் 4ம் திகதி வந்த தனது 60வது பிறந்தநாளை 9ம் திகதி பெப்ரவரி மாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று 60வது பிறந்தநாளை கொண்டாடும் நவரெட்ணம் நாகேந்திரம் அவர்களை அன்பு மனைவி ரஜனி, அன்பு பிள்ளைகள் அனுஜா, அனோஜன், அஜந்தன் மற்றும் அண்ணாமார், அண்ணமார், அக்காமார்,அத்தான் மார், தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சாள்மார்,பெறாமக்கள், மருமக்கள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள். இன்று 60வது பிறந்தநாளை கொண்டாடும் நவரெட்ணம் நாகேந்திரம் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் நல்ல தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்வென வாழ்த்துகின்றார்கள். இன்றைய தமிழ் ஒலியின் அனைத்துமேலும் படிக்க…


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !