Main Menu

50 ஆண்டுகளில் இல்லாத அளவு பரிஸ் விமான நிலையங்களில் பயணிகள் வீழ்ச்சி!

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு, பரிஸ் விமான நிலையங்களில் பயணிகளின் வருகை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்- 19 வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து முடங்கி போயுள்ளன. ஆனால் பெரும்பாலான நாடுகள் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு சுற்றுலாத்துறையை ஊக்கப்படுத்தி வருகின்றன. இதில் பிரான்சும் அடங்கும்.

இந்தநிலையில் உலகில் மிகப்பெரிய சுற்றுலாத் தளமான பரிஸில், விமான நிலையங்களில் பயணிகள் வருகை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் இந்த திடீர் வீழ்ச்சியை ஒருபோதும் விமான நிலையங்கள் சந்தித்தித்திருக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கமான பயணிகளில் போக்குவரத்தில் 90 சதவீதமானவை வீழ்ச்சி கண்டுள்ளது.

மீண்டும் இயல்புக்குத் திரும்ப 2024ஆம் அண்டில் இருந்து 2027ஆம் ஆண்டு வரை ஆகலாம் என நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விமான போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடைய குறைந்தது 4 ஆண்டுகள் தேவைப்படும் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த மே மாதத்தில் சர்வதேச விமான போக்குவரத்து 91 சதவீதம் குறைந்திருந்தது. அவை 86.5 என்ற அளவில் ஜூன் மாதம் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனாலும் நிலைமை முழுவதும் சீரமைய குறைந்தது 4 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளலாம் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...