Main Menu

40 வயதில் இருந்து மூன்றாவது தடுப்பூசியினை பரிந்துரை செய்யும் மருத்துவத்துறை

மூன்றாவது தடுப்பூசி இதுவரை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வரும் நிலையில், அதனை 40 வயதாக குறைத்து போட்டுக்கொள்ள முடியும் என மருத்துவத்துறை அறிவித்துள்ளது.

வரும் டிசம்பர் 1 ஆம் திகதியில் இருந்து 50 வயதினருக்கு மூன்றாவது தடுப்பூசி போடப்படும் என முன்னதாக அரசு தீர்மானித்திருந்தது. இந்நிலையில், இந்த வயது வரம்பை 40 ஆக குறைக்கலாம் என HAS (Haute autorité de santé) அறிவித்துள்ளது.

‘அண்மைய கால ஆய்வுகளின் படி 40 வயதுடையவர்களுக்கு அதிக பலனை மூன்றாவது தடுப்பூசி தருகின்றது!’ என HAS அறிவித்துள்ளது. அதேவேளை, அண்மையில் சுகாதார அமைச்சர் Olivier Véran தெரிவிக்கையில், 50 வயதினருக்கு கீழ் உள்ளவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி போடுவது குறித்து ஆராயப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...