Day: June 18, 2026
அம்பாறை வைத்தியசாலை பெண் இயன்முறை வைத்தியரே காரில் சடலமாக மீட்பு

அம்பாறை வைத்தியசாலையின் இயன்முறை வைத்தியர் (Physiotherapist) ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் உள்ள கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் தற்போது பரந்தளவிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவரது காதலன் சடலத்தைக் காரில் எடுத்துவந்து தெல்தெனிய பகுதியில் உள்ள ஒருமேலும் படிக்க...
யாழில் புகையிரத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி , இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால் என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீட்டுக்கு சென்ற நிலையில்மேலும் படிக்க...
உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான அமெரிக்காவின் விசாரணைகள் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் அல்லது தகவல்களையும் பெற்றுக்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இத்தகவல்கள் தற்போது அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (FBI) மற்றும் அமெரிக்க நீதித்துறையின்மேலும் படிக்க...
‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது

பிரித்தானியாவின் புகழ்பெற்ற நாட்டுப்புறக் கதைகளின் நாயகனான ‘ராபின் ஹுட்’ உடன் தொடர்புடையதும், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் புகழ்பெற்ற காட்டின் மையப்பகுதியில் கம்பீரமாக நிமிர்ந்து நின்றதுமான பழமையான ஓக் மரம் (Major Oak) உயிரிழந்துவிட்டதாக தாவரவியல் நிபுணர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம்ஷையரில் உள்ளமேலும் படிக்க...
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதலாவது சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதலாவது தமிழ் நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று (18) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இக்கூட்டத்தொடரில் ஆளுநர் அர்லேகர் ஆக்கபூர்வ உரையை நிகழ்த்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்தமேலும் படிக்க...
உத்திகளுக்குப் பதில் விசித்திரமான பிரச்சினைக்கும் முகம் கொடுக்கும் ஜெர்மனி அணி

பிஃபா (FIFA) உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் பங்கேற்றுள்ள ஜெர்மனி நாட்டு வீரர்கள், தற்போது ஆட்ட உத்திகள் மற்றும் எதிரணிகள் குறித்து மட்டுமன்றி, மற்றொரு விசித்திரமான பிரச்சினைக்கும் முகம் கொடுத்துள்ளனர். அமெரிக்காவின் வட கரோலினா (North Carolina) மாநிலத்தின் வின்ஸ்டன்-சேலம் (Winston-Salem)மேலும் படிக்க...
வாயை திறங்க CM: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை சீர்குலைந்துள்ளதாகக் கூறப்படுவதைக் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழக (திமுக) சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (18) சட்டமன்றத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, மாநிலத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதாகத்மேலும் படிக்க...
தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு இராஜதந்திர தீர்வு: ஜூலையில் இந்தியா செல்கிறார் அமைச்சர் சந்திரசேகர்

இலங்கை மற்றும் தமிழக கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினைக்கு இராஜதந்திர முறையில் தீர்வுகாண, எதிர்வரும் ஜூலை மாதத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களைத் தடுக்க கடற்படை மூலம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்மேலும் படிக்க...
40வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி. தர்சிகா விஜயராஜ் (மயு) (18/06/2026)

பிரான்சில் வசிக்கும் திருமதி. தர்சிகா விஜயராஜ் (மயு) அவர்கள், தனது 40வது பிறந்த நாளை இன்று தனது இல்லத்தில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றார். இன்று பிறந்த நாள் காணும் திருமதி தர்சிகா விஜயராஜ் (மயு) அவர்களை அன்புக் கணவர் திரு. விஜயராஜ், அன்புப்மேலும் படிக்க...
பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; ஆசிரியர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் பூனேவா (Poonewa) பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 56 வயதுடைய பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கண்டியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, மோட்டார்மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தாக்கல் செய்த மனு இன்று பரிசீலனைக்கு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று (18) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர்மேலும் படிக்க...
உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை – சுரேஷ் சலே

குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் உள்ள, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குனர் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். குற்றப் புலனாய்வு தடுப்புக் காவலுக்கு மீண்டும் திரும்ப விரும்பவில்லை என்றும், மரண தண்டனையேமேலும் படிக்க...



