3000 ஆண்டுகள் பழைமையான கோயில் கண்டுபிடிப்பு!
3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெருவின் கடலோர மாவட்டமான லாம்பேயிக்கியூ பகுதியில் இந்த கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் ஆய்வாளர்கள் குறித்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்த 21 கோபுரங்களுடன் கூடிய கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பண்டைய பெருவில் தண்ணீரை தெய்வமாக வணங்கிய சான்றுகளும் இந்த கோயிலுக்குள் கிடைத்துள்ளன.
131அடி நீளமும் 183 அடி அகலமும் கொண்ட இக்கோயிலில் வாள்போன்ற புராதனப் பொருட்களும் ஏராளமாக கிடைத்துள்ளன.