Main Menu

24ம் திகதி துக்கதினம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரகடனம்!

நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு துக்கதினத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. நாளை மறுநாள் 24ம் திகதி துக்கதினமாக பிரகடனப்படுத்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில், மாவை சேனாதிராசா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்-

நேற்று 21.04.2019 யேசு கிறிஸ்த்து உயிர்த்த நாளில் ஈஸ்ட்ர் கொண்டாட்ட நாளில் கொழும்பிலும், சுற்றுப் பிரதேசங்களிலும், மட்டக்களப்;பிலும் தற்கொலைக் குண்டுதாரிகளினாலும் ஏனைய இடங்களில் மர்மமான முறைகளிலும் கிருத்துவ மத தேவாலயங்களையும், பிரபல விடுதிகளையும் குறிவைத்துப் பயங்கரக் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. நூற்றுக்கணக்கான இலங்கை மக்களும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் கொல்லப்பட்டும், காயமடைந்தும் தீவிர சிகிச்சைக்கு ஆளாகியும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெறப் போகிறதென இலங்கை பாதுகாப்பு, உளவுத்துறைக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

அரசு பாதுகாப்புத்துறை இவ்விடயங்களில் முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளது. இத்;தகைய செயல்களை மட்டுமல்ல உளவுத்துறையின் செயலற்ற நிலமைகளையும் குறிப்பிட வேண்டும்.

இப் பயங்கரச் செயல்களால் மரணமடைந்த, காயமடைந்த, இழப்புக்களைச் சந்தித்துத் துயரத்தில் வீழ்ந்து கிடக்கும் குடும்பங்களுடன் துயர்பகிர வேண்டியது எமது மனிதாபிமானக் கடமையாகும்.

இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும். கண்டனம் தெரிவிக்க வேண்டும். இனியொரு இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என வற்புறுத்துவோம்.

இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக, மனிதாபிமானமிக்க மனிதர்கள் ஒன்றாக ஒற்றுமையாக எம் கண்டனத்தை வெளிப்படுத்துவோம். இது தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடுவோம்.

அவலத்தில் .வீழ்ந்து இழப்புக்களால் துயருறும் மக்களுடன் நாம் அவர்கள் கண்ணீரில் கலந்து துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு 2019-04-24 ஆம் நாள் புதன்கிழமை துக்க நாளாகக் கடைப்பிடிப்போம். அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறும் அழைக்கின்றோம்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும்...