Day: March 13, 2024
100,000 உக்ரேனிய அகதிகளை வரவேற்றுள்ள பிரான்ஸ் – பிரதமர் கேப்ரியல்

இரஷ்ய-உக்ரேன் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 100,000 உக்ரேனிய அகதிகள் பிரான்சுக்குள் வரவேற்கப்பட்டுள்ளதாக பிரதமர் கேப்ரியல் அத்தால் தெரிவித்தார். இன்று மார்ச் 12 ஆம் திகதி பிரெஞ்சு பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட பிரதமர் கேப்ரியல் அத்தால், கேள்வி நேரத்தின் போது இதனைமேலும் படிக்க...
மகளுக்காக பாஜகவில் இணைந்தார் சரத்குமார்?

மகள் வரலட்சுமிக்காக தனது கட்சியை நடிகர் சரத்குமார் பாஜகவில் இணைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளிவருகிறது. அண்மையில் நடிகர் சரத்குமார், பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில்மேலும் படிக்க...
இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம்: ஓ. பன்னீர்செல்வம்

பாஜகவுடன் நள்ளிரவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம் என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளார். விரைவில் எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளோம் என்பது குறித்து அறிவிப்போம். இரட்டை இலை சின்னத்தில் தான் நாங்கள் நிச்சயம் போட்டியிடுவோம்மேலும் படிக்க...
இந்தோ னேஷியாவில் படகு கவிழ்ந்ததால் இருவர் பலி 22 பேர் மாயம்

இந்தோனேஷியாவில் படகு ஒன்று கவிழ்ந்ததால் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 22 பேர் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். தென் சுலாவெசி மாகாணததின் சேலாயார் தீவுப் பகுதியில் கடந்த சனிக்கிழமை இப்படகு கவிழ்ந்தது. இப்படகில் 35 மீனவர்கள் இருந்தனர் எனவும்மேலும் படிக்க...
காசாவில் பட்டினி ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தப் படுகின்றது – ஐரோப்பிய ஒன்றியம்

காசாவில் பட்டினி ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை தலைவர் தெரிவித்துள்ளார். காசாவிற்குள் போதியளவு மனிதாபிமான பொருட்கள் செல்ல முடியாமல் உள்ளதை மனிதர்கள் ஏற்படுத்திய பேரழிவு என ஜோசப்பொரொல் வர்ணித்துள்ளார். போதிய தரைப்பாதைகள் இல்லாததே காசாவில்மேலும் படிக்க...
சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக வடக்கு ஆளுநருடன் இந்திய உயர் அதிகாரிகள் கலந்துரையாடல்

வட மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்வஞ்சல் பாண்டே (Dr.Satvanjal Pandey) உள்ளிட்ட குழுவினர் வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர்மேலும் படிக்க...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட மூவரையும் இலங்கை தூதரகத்திற்கு அழைப்பு

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன், ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோா் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு இன்று புதன்கிழமை (13) அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தமிழக அரசு சென்னைமேலும் படிக்க...
இலங்கை உத்தேச அரச சார்பற்ற அமைப்பு சட்டமூலத்தை கைவிடவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கடிதம்

இலங்கை அரசாங்கம் உத்தேச அரசசார்பற்ற அமைப்பு சட்டத்தை கைவிடவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்துவதை இலங்கை அரசாங்கம் நிறுத்தவேண்டும் மனித உரிமை தராதரங்களை மதிக்கும்மேலும் படிக்க...
1வது பிறந்த நாள் வாழ்த்து – விஜயராஜ் யுதிஷ் (Yudhish) 13/03/2024

பிரான்ஸ் குசன் வீலில் வசிக்கும் விஜயராஜ் – தர்சிகா(மயு) தம்பதிகளின் செல்வப் புதல்வன் யுதிஷ் தனது முதலாவது பிறந்த நாளை MARCH மாதம் 13ம் திகதி புதன்கிழமை இன்று தனது அண்ணாவுடன் இணைந்து தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார். இன்றுமேலும் படிக்க...
60வது பிறந்த நாள் வாழ்த்து – திரு.பொன்னையா குணம் (13/03/2024)

கனடா வன்கூவரில் வசிக்கும் பொன்னையா குணம் அவர்களின் 60வது பிறந்த நாள் 13ம் திகதி மார்ச் மாதம் புதன்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று பிறந்த நாளை கொண்டாடும் குற்றாலம் குணம் அவர்களை அன்பு மனைவி ராஜி, பிள்ளைகள் டினேஷ்,மேலும் படிக்க...