Main Menu

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவருக்கு வாரத்திற்கு 31 கோடி சம்பளம்!

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சல்மான் கானுக்கு வாரத்திற்கு 31 கோடி ரூபாய் சம்பளத்தொகையாக பேசப்படுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சியான இந்தி பிக் பாஸ் 13ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கவுள்ளது. டச் மொழி (Dutch) தொடரான Big Brother நிகழ்ச்சியை போல உருவாக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்தியில் கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி முதல் ஒளிபரப்பப்பட்டது. 

ஒளிபரப்பு செய்யப்பட்ட முதல் நாளில் இருந்தே, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான பார்வையாளர்கள் குவியத் தொடங்கினர். தொலைக்காட்சி மற்றும் சினிமா பிரபலங்களை 100 நாட்கள் ஒரே வீட்டிற்குள் இருக்கவைத்து அவர்களுக்கென பிரத்யேக விளையாட்டுகள் மற்றும் பணிகளை கொடுத்து அதன் மூலம் அவர்களது திறமையையும் அவர்களின் உண்மையான முகத்தையும் வெளிப்படுத்துவதே பிக் பாஸ் நிகழ்ச்சியின் சிறப்பம்சம். இதனால், பொதுமக்கள் பலர் மிகவும் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியை பார்க்கத்தொடங்கினர்.

இந்தியில் 10க்கும் மேற்பட்ட சீசனை கடந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசனை சல்மான் கான் தொகுத்து வழங்கவுள்ளார். இதற்காக சல்மான் கானுக்கு வாரத்திற்கு 31 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 26 Episode-களுக்கு 403 கோடி ரூபாய் சம்பளத் தொகையாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசன், வருகிற செப்டம்பர் 29ம் தேதி தொடங்கி அடுத்த வருடம் ஜனவரி 10ம் தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்படுள்ளது. 

பகிரவும்...