Main Menu

2019 ஐ.பி.எல்லில் 50 சிக்சர்களை முதலில் விளாசிய அணி

2019 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் 50 சிக்சர்களை முதலில் விளாசிய அணி என்ற சிறப்பை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்த சிறப்பை பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் ராஜ்கோர்ட் மைதானத்தில் நேற்று பலப்பரீட்சை நடத்தின.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜொஷ் பட்லர் 37 ஓட்டங்களை பெற்றார்.

பொறுமையாக துடுப்பெடுத்தாடிய ஸ்டீவன் ஸ்மித் ஐ.பி.எல். அரங்கில் ஏழாவது அரைச்சதத்தை எட்டிய நிலையில் 73 ஓட்டங்களை பெற்றார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைக்கு பின்னர் ஸ்டீவன் ஸ்மித் பெறும் முதல் அரைச்சதம் இதுவாகும்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்களை பெற்றது.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு கிறிஸ்லின் மற்றும் சுனில் நரைன் ஜோடி அதிரடி ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தது.

சுனில் நரைன் 3 சிக்சர்கள் 6 பவுன்டரிகளுடன் 25 பந்துகளில் 47 ஓட்டங்களை பெற்றார்.

கிறிஸ்லின் 3 சிக்சர்கள் 6 பவுன்டரிகளுடன் 32 பந்துகளில் அரைச்சதம் அடித்தார்.

ரொபின் உத்தபா 26 ஓட்டங்களையும் இளம் வீரரான சுப்மன் கில் 6 ஓட்டங்களையும் பெற்றனர்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

இதனிடையே, இவ்வருட தொடரில் முதலில் 50 சிக்சர்களை விளாசிய அணியாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் பதிவானது.

பகிரவும்...