Main Menu

1986 ல் சுவீடன் முன்னாள் பிரதமர் கொலை – குற்றவாளி கண்டறியப்பட்டார்

1986 ஆம் ஆண்டில் சுவீடன் முன்னாள் பிரதமர் ஓலோஃப் பா(ல்)மேக் கொன்றது யார் என்று தங்களுக்குத் தெரியும் என்று ஆனால் சந்தேக நபர் இறந்துவிட்டார் என்றும் ஸ்வீடிஷ் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

அவர்கள் சந்தேக நபரை ஸ்டிக் எங்ஸ்ட்ரோம் என அடையாளம் கண்டுகொண்டபோதும் “ஸ்காண்டியா மேன்” என்றும் அழைக்கப்படும் குறித்த நபர் 2000 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறியுள்ளனர்.

இதன் விளைவாக அவர்கள் சுவீடன் முன்னாள் பிரதமர்ஓலோஃப் பா(ல்)மே மரணம் தொடர்பான விசாரணையை முடிவுக்கு கொண்டுவருவதாக தலைமை வழக்கறிஞர் கிறிஸ்டர் பீட்டர்சன் கூறினார்.

ஸ்டாக்ஹோமில் தனது மனைவி லிஸ்பெட்டுடன் திரையரங்கில் இருந்து வீட்டிற்கு நடந்து செல்லும்போது சுவீடன் முன்னாள் பிரதமர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...