Main Menu

16 வயது சிறுவன் காவல் துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கு

16 வயதுடைய சிறுவன் ஒருவனை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். Rambouillet நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  Rambouillet (Yvelines) நகரில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்துக்கு இடமான மகிழுந்து ஒன்றை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் குறித்த மகிழுந்து நிற்காமல் காவல்துறை அதிகாரிகளை மோதிவிட்டு தப்பிச் சென்றது. N10 நெடுஞ்சாலையில் மகிழுந்து தப்பிச் சென்றது. குறித்த மகிழுந்து திருடப்பட்டுள்ளதாக முன்னர் பதிவான புகாரை உறுதி செய்த காவல்துறையினர், மகிழுந்து சாரதி நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  மகிழுந்தின் சாரதி காயமடைந்ததோடு Montigny-le-Bretonneux நகர் நோக்கி பயணித்தார்.  இறுதியாக Saint-Cyr l’École நகரில் வைத்து சாரதி கைது செய்யப்பட்டபோது, சாரதி 16 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது. தோள்பட்டையில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். 

பகிரவும்...