Main Menu

உள்ளிருப்பு காலத்தில் பதிவான அதிகூடிய குடும்ப வன்முறை

கொரோனா வைரஸ் காரணமாக உள்ளிருபு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட போது இதுவரை இல்லாத அளவு குடும்ப வன்முறை பதிவகியுள்ளது.  Hubertine Auclert association எனும் நிறுவனம் கடந்த பல வாரங்களாக இல் து பிரான்சுக்குள் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது. அதன் பின்னர், இன்று திங்கட்கிழமை அதன் முடிவுகளை அறிவித்தது. அதன் படி, இல் து பிரான்ஸ் மாகாணதுக்குள் 5,000 வழக்குகள் இக்காலத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மார்ச் 16 ஆம் திகதியில் இருந்து மே மாதம் 11 ஆம் திகதிவரையான உள்ளிருப்பு காலப்பகுதியில் 5,000 குடும்ப வன்முறை இல் து பிரான்சுக்குள் பதிவாகியுள்ளன. குழந்தைகள் பெண்கள் வன்முறைக்கும், உடல்ரீதியான வன்முறை மற்றும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியுள்ளனர்.   அதேவேளை, இதே காலப்பகுதியில் பரிஸ் காவல்துறை அவசர உதவி பிரிவுக்கு 33% வீதம் அதிகமான அழைப்புக்கள் குடும்ப வன்முறை காரணமாக அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...