Main Menu

15 மணி நேர நீடித்த ஊடகவியலாளர் சந்திப்பு; மாலைத்தீவு ஜனாதிபதி சாதனை

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹட் முய்சு (Mohamed Muizzu) சனிக்கிழமை (03) சுமார் 15 மணி நேரம் நீடித்த ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.

கடந்த சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு (0500 GMT) தொடங்கி நள்ளிரவு வரை நீடித்த இந்த ஊடகவியலாளர் சந்திப்பு, 2019 ஆம் ஆண்டில் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமைத்த 14 மணிநேர சாதனையை முறியடித்தது.

மாலைத்தீவு ஜனாதிபதி அலுவலகத்தின்படி, 46 வயதான முய்சு, இதன்போது ஊடகவியலாளர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

சந்திப்பு நள்ளிரவு வரை நீடித்தது.

ஜனாதிபதி முய்சு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு இங்கு தொடர்ந்து பதிலளித்ததுடன், அது ஒரு ஜனாதிபதியின் புதிய உலக சாதனையாகும்” என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

2019 ஒக்டோபரில் உக்ரேனின் தேசிய பதிவு நிறுவனம், ஜெலென்ஸ்கியின் 14 மணி நேர பத்திரிகையாளர் சந்திப்பு, பெலாரஷ்ய வலிமைமிக்க அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் ஏழு மணி நேரத்திற்கும் மேலான முந்தைய சாதனையை முறியடித்ததாகக் கூறியதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.

பகிரவும்...
0Shares