Main Menu

1311 பேர் தனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்

இராணுவத்தால் பராமறிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் மேலும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இதுவரை சுமார் 1311 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இதுவரை தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்த சுமார் 3459 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை புத்தளம், அல்காசிம் சிட்டி மற்றும் பாலாவி ஆகிய பகுதிகளில் இருந்நு சுமார் 65 பேர் புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவர்களை நேற்றிரவு தனிமைப்படுத்தில் நிலையங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர்களில் அண்மையில் இந்தோனேசியாவிற்கு சென்று வந்து மன்னார் தராபுரம் பகுதியில் மரண வீடு ஒன்றுக்கும் சென்று அதனை மறைத்தவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பகிரவும்...