Main Menu

13 ஆம் திருத்தத்தை நடைமுறைப் படுத்துவது குறித்த ஜெய்சங்கரின் கருத்திற்கு கூட்டமைப்பு பாராட்டு

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, சமத்துவம், நியாயங்கள், சமாதானம் மற்றும் கௌரவமாக வாழும் உரிமை என்பன ஒன்றிணைந்த இலங்கைக்குள் வெற்றிகரமாக முன்னெடுக்கபட வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்திற்கு கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

அதிகார பகிர்வு விடயத்திலும் அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இலங்கை அரசாங்கம் முன்னேற்றகரமான செயற்பாட்டை கையாளும் என தாம் நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன், அவரது அந்த கருத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என சகலரதும் நலன்களுக்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்பட எதிர்பார்பதாக ஜனாதிபதியும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு உறுதிப்பாடு ஒன்றினை வழங்கியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் உண்மையான எதிர்பார்ப்பு இதுவென்றால் அதற்காக எமது முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்க கூட்டமைப்பு தயாராக உள்ளதாகவும் எம்.எ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...