Main Menu

12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் இங்கிலாந்தில் இன்று ஆரம்பம்

12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகின்றது. ஜீலை மாதம் 14ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்த உலகக் கிண்ணத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்கின்றன.
12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் விளையாட உள்ளன.
இன்றைய முதலாவது போட்டி, லண்டனில் இலங்கை நேரப்படி, பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

பகிரவும்...