Main Menu

ஸ்ரீதேவியின் சில நினைவுகள் : வைரலாகும் ராம் கோபால் வர்மாவின் கடிதம்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினம் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ரீதேவி குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட  கடிதம் தற்போது வைரலாகி வருகின்றது. குறித்த கடித்தில் ஸ்ரீதேவி சம்பந்தமான பல சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

அவற்றில் ஒரு சிலவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்!

ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வெளியுலகம் நினைப்பதைவிட எப்படி முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்பதற்கு ஸ்ரீதேவியின் வாழ்க்கை ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

பெரும்பாலனவர்களுக்கு ஸ்ரீதேவியின் வாழ்க்கை மிகவும் நேர்த்தியானது என்ற எண்ணமே உண்டு. அழகிய முகம், சிறந்த திறமை, இரு அழகான மகள்களுடன் நிலையான குடும்பம் இருந்தது அவருக்கு.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவரது வாழ்க்கை விரும்பத்தக்கதாகவும், பொறாமைப்படும் வகையிலும் இருந்தது. ஆனால்  உண்மையிலேயே ஸ்ரீதேவி மகிழ்ச்சியாக இருந்தாரா?

அவரைச் சந்தித்த நாள் முதலே அவரை நான் நன்கு அறிவேன். அவரது தந்தை இறக்கும் வரை அவர் வானில் சிறகடிக்கும் பறவையைப் போல இருந்ததையும், அவரது தந்தையின் இறப்புக்குப் பின்னர் மிகவும் கட்டுப்பாடுகள் விதித்த அவரது தாயால் அவர் ஒரு கூண்டுப் பறவையைப் போல இருந்ததையும் நான் என் கண்ணாரக் கண்டுள்ளேன்.

‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் நடித்த சிறு காலக்கட்டத்தைத் தவிர அவர் பெரும்பாலும் மகிழ்ச்சியற்றவராகவே இருந்தார். எதிர்காலம் பற்றிய உத்தரவாதமின்மை, தனி வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்கள் அவரது மனதில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவர் நிம்மதியாகவே இல்லை.

மிகவும் இளம் வயதிலே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதால் அவரால் இயல்பான வகையில் வளர முடியவில்லை. புற அமைதியைவிட அவரது மனநிலையே மிகவும் கவலைக்குரிய விடயமாக இருந்தது. அதனால் அவர் தன்னைத் தானே தாழ்வாக நினைத்தார்.

ஒரு பெண்ணின் உடலுக்குள் சிக்கிக்கொண்ட குழந்தையாயாகவே ஸ்ரீதேவி இருந்தார். அவர் மிகவும் அப்பாவி ஆனால் தனது அனுபவங்களால் ஒரு சந்தேக மனநிலையுடன் அவர் இருந்தார். எனவே அது அப்பாவித்தனத்துடன் பொருந்திப்போகவில்லை.

இப்படியே என்னால் எழுதிக்கொண்டு போக முடியும். ஆனால் என்னால் கண்ணீரையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அந்த கடிதத்தை முடித்துள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

பகிரவும்...